Thursday, November 11, 2010
ஆயிரம் பேர் இருந்தாலும்..!
ஆயிரம் பேர் இருந்தாலும்..!
ஆயிரம்பேர் இருந்தாலும் ஆதவனாய் நீமட்டும்
அத்தனை பேரிலும் ஆதரவாய் நீ மட்டும்..!
மாயம் புரிந்துவிட்ட உறக்கம் கலைந்தபின்னர்
மாதவியே உன்முகம் தான் மதியினில் நிக்குதடி..!
எத்தனை கைதட்டல் என்பக்கம் என்றாலும்
அத்தனையும் உன்முறுவல் இல்லாமல் வெறுக்குதடி..!
பித்தனைப் போலவே வழிதோறும் உன்முகம்தான்
அத்தனை பேரிலும் என்மனம் தேடுதடி..!
எத்தனை ஆலயம் சென்றுநிதம் நான் தொழுதேன்
அத்தனை கடவுளரும் உனைக்காக்க வேண்டிநின்றேன்..!
மெத்தையில் இரவுதனில் உனைத்தடவித் தேடுகிறேன்
அத்தனையும் கனவுகளாய் மாறிடக் கலங்குகிறேன்..!
நான் தொழுது வேண்டுகின்றேன் நாத்தொழுது ஏங்குகின்றேன்
தேன்சுரக்கும் உன்சொற்கள் தேடிநிதம் நான் அழுதேன்..!
ஊனுறக்கம் மறந்துவிட்டேன் உன்மத்தனாகிவிட்டேன்
மீன்விழியாள் உனைத்தேடி் மீண்டிடா சோகம்கொண்டேன்..!
ஓடி வந்து என்னை ஒருக்களித்து தலைசாய்த்து
ஒழுங்கு கலைந்திட்ட முடிதனை விலக்கிவிடு..!
நாடிஉந்தன் சொற்களுக்காய் அன்னமாய்க் காத்துநின்று
நாவறண்டு போச்சுதடி நாயகியே அணைத்துவிடு..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment