Sunday, May 25, 2008
இயற்கை அழகு..........!
இயற்கை அழகு..........!
மேகம் முட்டும் வானுக்கென்றும்
எல்லை இல்லை இங்கே
தாகம் தீர்க்க மட்டும் எண்ணும்
மேகக்கூட்டம் அங்கே
வேகம் இன்னும் வேகம் என்னும்
காற்றின் ஊட்டம் நன்றே
மோகம் கொண்டே முயங்கச் சொல்லும்
வானின் பந்தல் உண்டே.....!... .....................(1)
வானும் மண்ணும் முத்தம் இட்டு
பாடம் சொல்லிச் செல்லும்
நானும் நீயும் சொல்லை மாற்றி
நாமும் சொல்லச் சொல்லும்
தேனும் நீயும் ஒன்றா என்றே
தேடல் செய்யச் செய்யும்
மீனும் மானும் இங்கே வந்து
அழகில் வெட்கிச் செல்லும்....!. ....................(2)
வானும் மண்ணும் முத்திக்கொள்ள
பாலம் போடும் மேகம்!
கானம் பாடி ஆட்டம் போடும்
வானம் பாடிக்கூட்டம்!
மோனம் கொண்டு மோகம் கொல்ல
தூண்டிச் செல்லும் மேகம்!
மானம் போயின் சாதல் என்று
சொல்லி நிற்கும் குன்றம்!........! .......................(3)
Subscribe to:
Post Comments (Atom)
Hi very thanks very nice
ReplyDeleteநண்பா உன் கற்பனை திறன் நன்ரக உள்ளது ஆனால் கவிதை இதுவல்ல படீக்கும் பொது வரும் உரைநடை போல் உள்ளது
ReplyDeleteவானும் மண்ணும் ....நீயும் நானும் ....தேனும் நீயும்.... மீனும் மானும்
ReplyDeleteவேகம் மோகம் தாகம் .என ஒரே ஒலிகள் கொண்ட சொற்கள்
வரிகளுக்கு மேலும் மெருகூட்டு கின்றன . பாராட்டுக்கள்
super
ReplyDelete