வாக்குமூலம்!!
உன்னைத்தழுவும்போதெல்லாம்
என்னைமட்டுமே நினைத்திருந்தேன்
எத்தனை சுயநலக்காரன்
இப்போது புரிகிறது
மன்னித்துவிடு என் மலர்க்கொடியே......!
சொன்ன சொற்கள் கொடிதென்று
அப்போது உணரவில்லை
தனிமையில் வெதும்பி
விட்டத்தின் மேல் விளையாடிக்களிக்கும்
இணைப்பல்லிகளின் விட்டுக்கொடுப்பில்
உன்னை உணர்ந்தேன்
மன்னித்துவிடு என் மல்லிகைக்கொடியே!
என் அன்பு பெரிதா உனது பெரிதா
எத்தனை கடினம் நிர்ணயிகக என்ற
என் இறுமாப்பு தகர்ந்தது...!
இதோ
உனது மனம்நோக வைத்த என் அன்பு
எத்தனை கொடிதென உணர்ந்தபோது
நிர்வாணமாய் உணர்கிறேன்...
மன்னிப்பாயா என் மலர்க்கொத்தே!
உனக்குப்பிடித்த வண்ணம் அறிந்தேன்
உன் காதல் எண்ணம் புரிந்தேன்
உன்னைத்தழுவும் வகையறிந்தேன்
எனக்காய் நீ வாழும் திண்ணம் அறிந்தேன்
என்னைத்தழுவியபோதெல்லாம்
எரிந்து சாம்பலான உன்சுயமறிய மறந்தேனே
மன்னிப்பாயா என் மனதறிந்தவளே!
தன்னலமின்றி தன்னையே தருவது அன்பு
உன்னன்பில் அதைமட்டுமேகண்ட நான்
என்னவோ தெரியவில்லை
ஆதிமுதல் உன்னை
அடக்கவே எண்ணி இருந்திருக்கிறேன்!
இன்று உணர்ந்தேன் என் தவறை
என்னை மன்னிப்பாயா என் மனைவியே!?!
பெண்ணை போற்றும் நம் நாட்டில் மனைவியின் அன்பில் கட்டுண்டு
ReplyDeleteஎங்கே தன் வார்த்தைகள் அவளை
சிறை செய்ததோ துன்புறுத்தினதோ
என்று துடித்து எழுதிய இந்த வாக்குமூலம் கவிதை மிக மிக அழகு மட்டுமல்லாது உன்னோட அன்பான மனசையும் மனைவியின் மேல் நீ கொண்ட தீராத பாசமும் காதலும் இதில் கண்டேன்... இன்று போல் என்றும் சௌக்கியமாக தம்பதி சமேதராக இருக்க என் ப்ரார்த்தனைகள் கலை ------- மஞ்சு
அழகான மனதின் எண்ணங்கள்
ReplyDeleteகாதலை பறைசாற்றுமுன் அவனை
திருட்டுத்தனமாய் ரசிக்கும் மனமும்
ஆசைகளை வெளிப்படுத்திய விதமும்
மிக மிக அழகு கலை.....
----------- மஞ்சு