என்னுயிர்த்தோழியே,
என் இனிய இம்சையே,
மௌனமாய் நான் இருந்தால்
வம்பிழுத்து வளவளப்பாய்...
வாயதிகம் அசைத்திட்டால்
வாயாடித் திலகமென்பாய்...
முகத்தை கோபமாக்கி
முறைத்திடும் கணங்களிலோ
போடா உன் சினமெல்லாம்
பொருட்டல்ல எனக்கென்பாய்...
கவலை தோய்ந்த முகம் கண்டால்
கமலமாய் கூம்பி நிற்பாய்
கலகலப்பால் சிரிக்கவைப்பாய்
கணப்பொழுதில் எனைஉடனே...
நானளக்கும் அரட்டையெல்லாம்
நாளெல்லாம் கேட்டுநிற்பாய்
கடைசி நிமிடத்தில்தான்
கதைவிடாதே எனச்சிரிப்பாய்...
தாயில்லை எனச்சொல்வேன்
நானில்லையா உனக்கென்பாய்
நட்பில்லை என அழுவேன்
ஓடிவந்து தோளணைப்பாய்...
நானறிந்த நட்பினிலே
உனைப்போல யானறியேன்
நல்லவைகள் ஆதரித்து
அல்லவைக்கு அடிதருவாய்...
தோழியா என் தாயிவளா
தொன்றுதொட்டு நானறியேன்
வாழிய நீ வையகத்தில்
வாழ்ந்திடுவேன் உன்னிழலில்...!
தோழமையில் தாய்மையைக் கண்ட கவிப் பார்வை... அருமை!!
ReplyDeleteநட்புடன்...
"நந்தலாலா" இணைய இதழ்,
nanthalaalaa.blogspot.com
நன்றி நண்பரே...விரைவில் அனுப்புகிறேன்..! நீங்களே கூட இதில் உங்களுக்கு பிடித்த கவிதைகளைப் பிரசுரிக்கலாமே...நான் ஈகரையில் அதிக நேரம் இருப்பதால் அங்கே நீஙக்ள் என்னை சந்திக்கலாமே...
ReplyDeletewww.eegarai.net