தன்னை உணர்ந்த போதிமரம்..
ஒருகாலை பூமியில் ஊன்றி
மறுகாலுக்காய் மனதை ஊன்றிய
ஊன்றுகோல் ஒட்டவைத்த சான்றுகோல்..
வானுயர்ந்த எண்ணக்கோபுரங்களுடன்
ஓர் ஒற்றைத்தூண்..
அடிமரம் பழுதானாலும் அங்கங்கள் விழுதாகும்
ஆலமரம்..
ஒருக்கால் சறுக்கியதால்
மறுகால் படைக்க மறந்த
இறைவனுக்கும் ஊனமோ..?
No comments:
Post a Comment