Monday, February 13, 2012

காதலர்களுக்கு மட்டும்..



காதல்..
வெட்டிய வாழையின் கண்ணீர் போல்
விரைவாய்த்துடிப்பது..


காதல்..
எட்டி நின்றாலும் எத்திலீனைப்போல்
பற்றி எரிவது..


காதல்.. 
பலமணி நேரம் எழுதிய தேர்வின்
நொடிப்பொழுது பரிணாமம்..


காதல்..
சொற்களில் நிறைவாய் சோகங்கள் குறைவாய் 
சொக்கி இழுப்பது..


காதல்..
எங்குதிரும்பினாலும் வடதிசை நோக்கும்
காந்தமுள் போன்றது..


காதல்..
எத்தனைப் பச்சைகிடைப்பினும் தன்
வறண்ட நிலம் தாண்டாதது..


காதல்..
எச்சொல் எவரிடம் கேட்பினும் அச்சொல்
கவர்ந்தவனிடமே யாசிப்பது..


காதல்..
எத்தனை தொலைவாயினும் இதயத்தின்
அருகாமை தொலைக்காதது..


காதல்..
தன்னவன் முகத்தையும் பிறரதன்
முதுகையும் காண்பது..


காதல்..
கொண்டவனுக்கே எச்சில்விழுங்கி
குறுகுறுத்துப் பார்ப்பது..


காதல்..
மன்னனேயாயினும் துச்சமாய் எண்ணி
தன்னவனுக்காய் தனித்தே வாழ்வது..


காதல்.. 
கொலையனே யாயினும் கொண்டவன்
கூற்றே நீதியென உரைப்பது..


காதல்..
வருடங்களாய் கண்கள்அயர்ந்தும்
தளராமல் காத்திருப்பது..


காதல்..
ஒற்றை வார்த்தையில் கட்டிப்போடும்
இன்பவிலங்கு..


காதல்..
உயிரை இழந்தாலும் தன் 
இணையை இழக்காதது..


உலகெங்கும் வாழும் உன்னதக்காதலர்களுக்கு என் அன்பான காதல்சமர்ப்பணம்..!

5 comments:

  1. காதலைப் பற்றி மிக அற்புதாமான
    காதல் அர்த்தங்கள் சொல்லும் அழகிய கவிதை

    ReplyDelete
  2. உங்க பாராட்டுக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் மிக்க நன்றி செய்தாலி..!

    ReplyDelete
  3. கலை அண்ணா
    விருது ஓன்று பகிர்ந்துள்ளேன்
    நேரம் கிடைப்பின் வந்து பார்வையிடுங்கள்

    ReplyDelete
  4. மிக்க நன்றி செய்தாலி.. உங்கள் பாராட்டை விட பெரிய விருது ஒன்றுண்டோ..?

    ReplyDelete
  5. பாராட்டுக்கள் அண்ணே

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete