05.05.2002 ஆனந்த விகனில் பவள விழா கவிதைப்போட்டியில் வெளியாகி வாசகர்களால் தெரிவு செய்யப்பட்டு மூன்றாம் இடத்தைப்பெற்று மொத்தம் 7000 ரூபாய் பரிசு பெற்ற கவிதை!
கள்ளச்சாராயம்
காய்ச்சிய பணத்திலும்
உடலை விலை பேசி
விற்று வந்த பணத்திலும்
ஏழைத் தாலியின்
அடகுப் பணத்திலும்
ஈட்டிக்காரனின்
வட்டிப் பணத்திலும்
புன்னகைத்த முகத்துடன்
காந்தி படம்!
காந்தியின் புகைப்படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று என்னிடம் யாரோ சிலநாள் முன்பு கேட்ட கேள்விக்கு விடையாக இருக்கிறது உங்கள் கவிதைவரிகள். பரிசுக்குரிய கவிதைதான். நன்றி நண்பரே.
ReplyDelete