Thursday, July 5, 2012

மழலைக்கவிதையொன்று..!

Image


அழியாத கவிதையொன்று
அரங்கேறும் மன்றிலின்று..

மொழியெல்லாம் மலர்வாசம்
எழுத்தெல்லாம் மணம் வீசும்..

விழியின்றி கவர்ந்து நிற்கும்
விளக்கின்றி ஒளிகாட்டும்..

செழிப்பான கவிதையென்றே
செம்மையாய்ப் பெயரெடுக்கும்..

மழலைக் கவிதையன்றோ
மாறாத கவிதை என்றும்..!

உழலும் மனம் தேற்றும்
உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்

கழலணிந்து நடக்கையிலே
கவனமெல்லாம் கவர்ந்து நிற்கும்..

அழகையெல்லாம் அள்ளிவீசி
ஆனந்தம் அள்ளித்தரும்..

No comments:

Post a Comment