Thursday, July 5, 2012

எரிதழல் கொண்டுவா நீ..!

1.

தன்மானங் கெட்டுத் தறிகெட்டுச் சீரழிந்து
உன்மானம் போக்கிடும் சிங்களர்கள் - முன்னால்
விரிகூந்தல் பேரழகி கண்ணகியே இன்னோர் 
எரிதழல் கொண்டுவா நீ.



2.

தமிழ்மகனே யுந்தன் தரங்கெட்டுத் தாழ்ந்து 
உமிழ்கின்றா ரெச்சிலதை பாரில் - உமியளவும்
ஈவிரக்க மேதுமின்றிக் கொன்றழித்தார் இவ்வினத்தை
போவிது யுன்பெருமை சொல்.



3.

இன்றுங்கள் காலம்கை கொட்டியே ஆர்த்திடுவீர் 
நன்றாகச் செய்யுங்கள் நர்த்தனமும் - என்றேனும்
எங்களுக்கும் காலமுண்டு என்றேனும் சேர்ந்துதைப்போம்
சிங்களரே கூத்தாடு வீர்.




No comments:

Post a Comment