தன் நெஞ்சறிவது..புதிய கீதை..!
நெஞ்சறிய பொய்பேசி என்னபலன் கண்டாய்
வஞ்சனைகள் எண்ணி நீயும் என்ன சுகம் கண்டாய்
கொஞ்சமெனும் இறைவனுக்கு அஞ்சிநட வென்பேன்
நஞ்சமது நமைக்கொல்லும் நன்கறிவாய் நண்பா..!!
நான்குபேர்கள் சொன்னதாலே யாவும்உண்மையாமோ
தீங்குபல எண்ணுவதால் தீட்சை பெறுவாயோ
ஈங்குவந்து அவதரித்தோர் மெய்யதனை வென்றார்
தாங்குமிந்த பூசுழலும் மெய்யிலது நண்பா..!!
பட்டறிந்து முன்னோர் சொன்ன பத்துவித மெய்கள்
நட்டமில்லை நாமுணர்ந்து நாளும்கடை கொண்டால்
சட்டதிட்ட மல்லநம்மை சரணடையச் செய்ய
வட்டமிடும் நம்மனத்தின் சான்று பெரிதென்றோ..?
நட்புபேணில் அவ்விலக் கணமறிவாய் நன்றாய்
முட்புதராய் மண்டிநிற்கும் காழ்ப்புணர்வைக் கொல்வாய்
தட்பவெப்பம் கண்டுதானே மாவினமும் பெருக்கும்
நுட்பமதை நீயறிந்தால் நீயுயர்வாய் நண்பா..!!
சீற்றம்கொண்ட சிந்தனைகள் சீரழிக்கும் உன்னை
ஏற்றம்பெறும் வழியனைத்தும் ஏய்த்துவிடும் முன்னே
ஆற்றலென்ன வென்றபோதும் ஆர்மதிப்பர் உனையே
தூற்றலின்றி வேறுஏது தொடர்ந்துவரும் நண்பா..?
எந்தன் நெஞ்சில் ஏதுமில்லை என்றுகொள்ளு நீயும்
நொந்த மனம் தேற்றிநீயும் நோன்பில் மூழ்குவாயே
எந்தவிடம் உந்தன் நெஞ்சில் காயமாக்கும் என்றே
உந்தன் நெஞ்சைத் தேற்றிநீயும் தேறிடுவாய் நண்பா!!

No comments:
Post a Comment