Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 1 - 10

1. 


மலரன்ன ஒர்முக மென்மனம் ஈர்த்தே
அலரவைத் திட்டதோர் முள்.


2.

அமிழ்தினு மேவிய தாமவள் செவ்வாய்
தமிழவள கூறிடுங் கால்.


3.

காலன் கணக்கினை யாரறி வார்மிகச்
சீலனும் காணுமவ் வூழ்.



4.

உரைத்தது சீர்மிகின் பேர்வரும் தீய
துரைத்திடின் மானம் கெடும்.


5.

யானென் றகந்தையுடன் யானைபோல் வந்தவன்
போனானே சேறழுந்திப் போய்.


6.

இல்லென்று நோக்கிடின் இல்லாத தாகுமிங்
கில்லென்று எண்ணிடில் இல்.


7.

தோதுபடின் செல்தூதாய் நண்பனின் உள்ளறிந்து 
சூதுவரின் ஓர்த்தல் நலம்.


8.

ஆய்ந்தறிந்த மெய்கண் டதனுட் பொருளுணர்ந்து
வாய்த்தது கொள்ளல் அறி.


9.

அஃதெளி திஃதுகடி தென்றேதும் எண்ணிடாது
எஃகெனவே நிற்றல்நன் றாம்.


10.

இல்லையே யென்போருக் கீதலினு மென்னிடம்
இல்லென் றிரக்காதல் மேல்.



No comments:

Post a Comment