Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 31 - 40

31

வளர்பிறையும் தேய்பிறையும் ஆங்கே மனிதன் 
தளர்வறியா வாழ்க்கை நகும்.


32.

எண்ணியிருந் தாலொரு தூயதோர் எண்ணமே
அல்லது எண்ணா திரு.


33.

பகர்வது என்றும் பயனேற்க அன்றேல்
பகராமை அல்லதே மேல்.


34.

காண்கின்ற காட்சியெல்லாம் மெய்யல்ல மானேயுன்
மாண்புடை சிந்தைசெய் சீர்.


35.

பார்வையா லோர்முறை நோயதைத் தந்தொரு
பார்வையால் தீர்த்தனள் பார்.


36.

அன்றுவந்தாய் நன்றுவந்தாய் நாமுவந் தோம்நன்றாய் 
இன்றென்னைக் கொன்றது மேன்..?


37.

கவிபடைத்துச் சொல்லுடைத்துப் பார்க்கின்றோம் நீரோ 
செவியடைத்துச் சாகின்றீ ரே.


38.

எழுந்து நடந்த கதிரோன் முகத்தில்
விழுந்து தெறிக்கும் பனி.


39.

தன்மையா லுன்னைக் கவர்ந்தோர் பொருட்டேநீ
உண்மையாய் வாழ்வாய் நிதம்.


40.

பாரிங்கே பாரின்கீழ் பாரழிவு என்பாரே
பாருக்கு முன்முந்து வர்.

No comments:

Post a Comment