Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 41 - 50

41.

செல்பவர் செவ்வழிச் செல்லின் புறமது
சொல்பவர் சொல்லென் செயும்.


42.

நஃகுதல் நட்பன்று என்றும் இடர்தோறும்
எஃகுபோல் காத்தலே நட்பு.


43.

உண்டெனில் ஊர்ப்பசி தீர்த்தலும் இல்லெனில்
மண்டிலம் நீத்தலும் நன்று.


44.

கூறிட்டே நாடதைக் கொன்று குவித்திடுவார்
சேறில் உளையும் பதர்.


45.

மதியேதும் கூறிடு மவ்வழிச் சென்று
விதியதன் நேர்விடல் தீது.


46.

வருதே வறுமைப் பிணிதருதே வென்று
கருதா துழைப்பாய் நிதம்.


47.

பாம்பின் விடமேற கொள்ளும் வெகுநேரம்
தாம்புரிந்த பாவம் மிகும்.


48.

சாற்றுக சாந்தோறும் சான்றான்மை அஃதின்றேல்
நோற்றும் எதுவாம் பயன்.


49.

இங்கிந் நொடியது வாழ்க்கை யெனவெண்ணி
சங்கே முழங்கி விடு.


50.

முகத்திரு கண்பயனென் கொல்நோக்கின் இன்றேல்
அகத்திரு மெய்ஞ்ஞானக் கண்.


No comments:

Post a Comment