Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 21 - 30

21.

என்றும் மறவா முதற்காதல் நல்மனதின் 
ஆழம் பதிந்து விடும்.


22.

மேன்மையுள்ளங் கொண்டோர் புவியாள்வர் மற்றையோர் 
சூன்யமாய்ப் பின்தொடர் வார்.


23.

உள்ளதே போதுமெனும் உள்ளத்தோர் பூவுலகில்
எள்ளளவும் தேயா தவர்!


24.

துணையாகும் நன்னெறி துய்த்து உயர்வோர்
இணையாவர் என்றும் இறைக்கு!



25.

கரைந்துண்ணும் காகத்துள் சேர்ந்திருக்கும் நேசம்
விரைந்துண்ணும் மானிடர்க்குண் டோ.
 

26.

தருவானெ மக்கருள் தாந்தோன்றி யானோன்
வருவானென் றோர்த்திடு நீ.
 

27.

மருந்தென வேண்டாம் மருத்துவந்தான் வேண்டாம்
விருந்தை ஒழித்திட்டக் கால்.
 

28.

உனக்கென்று ஓர்வழி நேர்நிலைப் பார்வை
சினக்குணம் இல்லாமை மேல்.
 

29.

வரும்போகும் ஓர்நிலையில் நின்றிடாது ஓடும்
தரும்இன்னல் என்றும் திரு.
 

30.

செல்வதோ இவ்வுலகை விட்டொன்றும் செய்திடாமல்
வெல்வ துவகை உணர்.





No comments:

Post a Comment