கோபம்..
கோபம் எதிரியாம்
சொன்னார்கள்...
ஆனால்
அதைவிட அரிய நண்பன் உண்டா
நான் கேட்கிறேன்...
கோபத்தால் பல நன்மைகள்...
கோபம் வேலையைப் போக்கிவிடும்..
ஹாயாக வீட்டில் டிஸ்கோ ஆடலாம்!
கோபம் காதலியை விரட்டிவிடும்
கல்யாணமே இல்லாமல்
பொழுதுபோக்கலாம்....
கோபம் பெரியவர்களை
நம்மிடமிருந்து பிரித்துவிடும்
அவர்கள் அறிவுரை தொல்லை இல்லை!
கோபம் நம்மை ஏழையாக்கும்
ஜாலியாய் பிச்சைஎடுக்கலாம்!
ஆகவே நண்பர்களே
கோபம் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment