Saturday, August 18, 2012

வெளிச்சம் மறுக்காதீர்..!






















இருட்டறைக்குள் இன்னல்கள் நேர்ந்ததால் 
உண்மை வெளிச்சத்துக்கு வந்ததோ..?

கல்விக்கும் கலைக்கும் போட்டி...
தெருவிளக்கே நீதிபதியோ..?

வாழ்க்கையை நடுவீதியில் தொலைத்து
நடைபாதைக்கு இளைப்பாற 
நாடி வந்தனளோ சரஸ்வதி தேவி ..?

வீட்டுப்பாடம் தந்த வகுப்பாசிரியர் 
வீட்டினைக் காட்டிடமறந்தார்..
ஆகையால் தெருப்பாடம் ஆகியதோ..?

தெருவிளக்கில் படித்தோர் எல்லாம் 
மேதையாவதில்லை.. 
மேதைகள் சிலர் தெருவிளக்கில் தான்
உருவாக்கப்பட்டனர்...

கைவீசி நடப்போரே கொஞ்சம்
விழி வீசி கவனிப்பீர்..
இந்தக் குழந்தைக்கு வெளிச்சம் மறுக்காதீர்..
நிழலாய் மறைத்து நிஜத்தைப் புதைக்காதீர்..!

No comments:

Post a Comment