Tuesday, April 10, 2012

கையற்ற பொம்மைகள்.

கையற்ற பொம்மைகள்.

நம்பிக்கை வைக்காத மனிதன்
கையற்ற பொம்மை என்பேன்..

வாழ்க்கை எனும் வழுக்குநிலத்தைக்
கரைசேர வைக்கும் கோல் நம்பிக்கை..

அஃதின்றி 

கையற்ற பொம்மைகள்
கைதட்ட முனைவது போல்
கால் நழுவிச்செல்லும் பூமி..
கைகொடுக்க யாரும்வருவாரோ..?

அடுத்தவேளைக்காய் 
நம்பிக்கை வைத்ததால்
அசந்து உறங்குகிறது தெருநாயும்..

அடுத்த பயணம் பயனுறும் என்பதால்
காலிடுக்குகளில் கூட 
லாவகமாய் ஊர்கின்றன எறும்புகள்..

இன்றைய பூச்சி வாய் நழுவிய போதும்
நம்பிக்கையுடன் முன்னேறும் பல்லிகள்..

புறக்கையை எண்ணி 
இறுமாந்தவனைப்பார்த்து
இல்லாத கைகொட்டிச் சிரிக்கின்றான் 
நம்பிக்கை மட்டுமே கொண்ட‌
கால் மனிதன்....

நம்பிக்கை..
ஓர் ஊன்றுகோலல்ல..
நம்மை உயர்த்தும் 
சான்றுகோல்..

அவற்றை இழந்தவனைப்பார்த்து
கெக்கலித்துச் சிரிக்கிறது 
கையற்ற பூமிப்பந்து..!

No comments:

Post a Comment