Tuesday, April 10, 2012

கண்களை வருத்தும் கண்மணிகள்..

கண்களை வருத்தும் கண்மணிகள்..

கானல்நீரைப் பார்த்து
களைத்திருந்த கண்களுக்கு
மோனமாய் ஒத்தடம் 
தந்தவள் நீதானே..?

என் இருகண்கள் ஒன்றையொன்று 
யுத்தப்பார்வை பார்த்திருந்தபோது
சமாதானப் புயலாய்
சாதித்தவள் நீதானே..?

புருவமுடிச்சுகள் பிணைந்து
கழுத்தை நெறித்துக்கொண்டிருக்க‌
பருவ மழைபோல் வந்து
பிரித்து விட்டவள் நீதானே..?

ஒற்றைக் கண் 
ஒருவனையே பார்த்திருக்க‌
மற்றக்கண்ணுக்கும் மடல்போட்டு
மதிக்கச்சொன்னவள் நீதானே..?

இன்று..

இருகண்களுமே கண்மணிகளை
கருவறுக்கக் காத்திருக்க‌
உந்தன் சரிப்படுத்தலுக்காய்
ஓய்ந்திருப்பது தெரியாதா..?

உன் சமாதானத்துக்காகவே 
நான் சண்டையிட்ட நாட்களுண்டு
நீ பிரித்தெடுக்க வேண்டும் என்பதனால்
என் சிக்கலை தீவிரப்படுத்தியதுண்டு..

உன் வருடலுக்காகவே 
என் புருவங்கள் தினவெடுத்த 
காலங்களுண்டே..

இருகண்மணிகளும் 
இருண்டுவிடும் முன்
உன் 
ஒளிக்கிரணங்களை நீட்டிவிடு..

தற்கொலைக்குக் காரணமாய் ஆனோரும்
கொலைகாரர்கள் கணக்கில்தான்
வரவுவைக்கப்படுவதால்..

கொலைகாரி ஆகிவிடாதே..!

No comments:

Post a Comment