நினைவுக்குளத்தில்
சந்தர்ப்பக்கற்கள் தவறி வீழுமபோது
படிந்து போன நெகிழ்வுப்பாசிகள்
கலங்கி மேல் வந்து
கண்கலங்க வைப்பது புதிதல்ல....
காதல் என்னும் ஒற்றை மந்திரம்
கரு நாகத்தையும்
கட்டுண்டு போகவைக்கும்...
கடந்து போன நினைவுகளும்
கலைந்து போன கனவுகளும்
குடிகாரனின் உளறல் போல
அடிக்கடி வந்து
அயர வைக்கும்....
கடந்த பாதையில் கவனம் இருந்தாலும்
விடமாய் நெஞ்சில் பதிந்திருந்தாலும்
கடமைகள் நம் கால்களைக்
கட்டிவிடக்கூடாது.....
வாழவைக்குமென எண்ணிய காதலை
வீழவைப்பதாய் கருமாற்றலாமா...?
This comment has been removed by the author.
ReplyDelete