Friday, April 9, 2010

கண்ணே கண்மணியே!



















கண்ணே கண்மணியே!


என் தாலாட்டுக்கு
கருப்பொருளாய் வாய்த்தவளே!
கண்ணே கருமணியே!

நீ கருவாய் இருக்கையில்
ஒரு வாய் உண்ணமுடியா
மசக்கை தந்தவளே!

உன்னைச் சுமந்ததால்
என் வயிறு
உன்னதம் பெற்றது...

நீ உண்ணும் போது
என் வயிறு குளிரும்
ரசாயனம் நிகழந்தது..

நாளை உலகுக்கு
அறிவுப்பசி தீர்ப்பவளே!
உன்பசி தீரட்டும் இன்று!

நிலாவைக் காட்டுகிறேன்
நீ அதில கால் வை நாளை!

கள்ளிப்பால் தரச்சொன்ன
கொள்ளிவாய்கள் அழுகட்டும்...
நீ அழப்பிறந்தவளல்ல!
ஆளப்பிறந்தவள் நீ!

Saturday, April 3, 2010

மலரும் வண்டும்...























மலரும் வண்டும்...


மலருக்கு மலர் தாவும்
வண்டினைக் கண்டதுண்டு...

வண்டுக்கு வண்டு தாவும்
மலரினைக் கண்டதுண்டா...?

எம்மலர் சிறந்ததெனத் தேர்ந்தெடுத்து
தேன்குடிக்கும் வண்டுக்கோ
மலரின் வலிகள் புரிவதில்லை...

வண்டுதாவும் மலர்களுக்கும்
வண்டின் ரணம் புரிவதில்லை...

ஒற்றைக்காலில் தவமிருக்கும்
ஒற்றை மலருக்கு
வண்டின் எத்தனம் புரிவதில்லை...


மகரந்தப் போதையில் மூழ்கி
மலருக்காய் உயிர்கொடுத்த வண்டுக்கோ
மலரின் மெத்தனம் தெரிவதில்லை..


வண்டுகளின் போதையில்
வாட்டமாய் மயங்கி விட்ட
மலருக்காய் ஏங்கி விட்ட
வண்டுக்கோர் அஞ்சலி...!