
கண்ணே கண்மணியே!
என் தாலாட்டுக்கு
கருப்பொருளாய் வாய்த்தவளே!
கண்ணே கருமணியே!
நீ கருவாய் இருக்கையில்
ஒரு வாய் உண்ணமுடியா
மசக்கை தந்தவளே!
உன்னைச் சுமந்ததால்
என் வயிறு
உன்னதம் பெற்றது...
நீ உண்ணும் போது
என் வயிறு குளிரும்
ரசாயனம் நிகழந்தது..
நாளை உலகுக்கு
அறிவுப்பசி தீர்ப்பவளே!
உன்பசி தீரட்டும் இன்று!
நிலாவைக் காட்டுகிறேன்
நீ அதில கால் வை நாளை!
கள்ளிப்பால் தரச்சொன்ன
கொள்ளிவாய்கள் அழுகட்டும்...
நீ அழப்பிறந்தவளல்ல!
ஆளப்பிறந்தவள் நீ!
அன்பு கலை,
ReplyDeleteதாயின் அன்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை...
தன்னை முழுமையாக தந்து உயிரை உருவாக்கும் உலகிற்கு உயிர்ப்பூவை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உடையவள்...
அத்தகைய தாயின் அன்பையும் பெண்ணின் பெருமையையும் அழகாய் கவிதையில் இயற்றிய உன்னை எப்படி சொல்வேன்...
அத்தனை அழகு வரிகள்... அதில் தெரிந்த ஆதங்கம்... பெண்ணே இந்நாட்டின் கண் என்பதை ஆணித்தரமாக சொன்ன உன்னை எத்தனை பாராட்டினாலும் தகும்...
அன்புத்தோழி
மஞ்சுபாஷிணி
ஏன்பா கவிதை எழுத வராட்ட எழுதக் கூடது... ஈகரைய நாசமாக்குறது பத்தாதா?...
ReplyDeleteநிருத்துய்யா உன்னொட அருவய...
பிரியா,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
முகம் தெரியாத பிசாசுகளுக்கு பதில் சொல்வதே கேவலம் எனக்கு...
ReplyDeleteஇங்கே வந்து பொதுவில் உன்னை நிர்வாணப்படுத்திக் கொள்வதற்கு பதிலாய் நேரடியாய் உன் பிரச்சினை என்ன என்பதை என்னிடம் கேட்டு தெளிவாக்கிக்கொள்...
லட்சக்கணக்கானவர்களின் விருப்பை நீ தூஷிக்கிறாய் என்பதே உன் மனநிலைக் கோளாறை தெளிவுபடுத்துகிறது..
உனக்காக அனுதாபப்படுகிறேன்...பிரியா...
மிகவும் அருமையான கவி, வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகு !
ReplyDeleteஅழகான கவிதை
ReplyDeleteஅற்புதமான உணர்வு
இதை விட ஒரு தாயின் உள்ளக் கிடக்கையை ஒரு ஆண் தனது படைப்பில் புகுத்தி நான் கண்டதே இல்லை. பால்குடியின் யதார்த்தம் சொல்லப்படும் அதே நேரத்தில் பாசம் இங்கு ரசாயன மாற்றத்தை சுட்டும் போதே கவிதையின் உன்னதம் கருவில் அவளை சுமந்ததைக் காட்டிலும் உயர்ந்து நின்று சிறக்கிறது.
என் பணிவான வேண்டுகோள்: பயனற்ற மறு மொழிகளுக்கு விடை தர வேண்டாம்...பாவம் அவர்கள் நல்ல கவிதைக்கு ஏங்கி.... இங்கே தான் அது கிட்டும் என்பதால் உன் காலடியில் தவம கிடக்கிறார்கள்...சகோதரரே...
உமது படைப்பு முலம
நல்லார்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும்...
இனிய கலைவேந்தன் அவர்களே உங்கள் வலைப்பூவில் உள்ள கவிதைகள் அனைத்துமே சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகா.ந.கல்யாணசுந்தரம்.
அருமையான வரிகள்
ReplyDelete