Monday, July 25, 2011

முத்தான மூன்று முடிச்சு..!
Monday, July 25, 2011


கதம்ப உணர்வுகள் மஞ்சு (http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்சு பதிவுத் தொடரினை இங்கே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.


பிடித்த உறவுகள்

1.அம்மா.
2. என் சகதர்மிணி
3. நட்புகள்


பிடித்த உணர்வுகள்.                

1.நட்பு.
2.காதல்...
3.தனிமை...

பிடிக்காத உணர்வுகள்.            

1.துரோகம்
2.முதுகுக்குப் பின் பேசுதல்...
3.புறக்கணிப்பு..


முணுமுணுக்கும் பாடல்கள் 

1.குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...
2.கருணைக்கு எல்லை ஏதைய்யா..?
3.உன்னைத்தானே... தஞ்சம் என்று நம்பிவந்தேன் மானே..

பிடித்த திரைப்படங்கள்

1.எம்ஜிஆரின் படங்கள்
2.பாலச்சந்தரின் படஙக்ள்
3.ரஜினி படங்கள்


அன்புத் தேவைகள்

1.சாய்ந்துகொள்ளத் தோள் வேண்டும்
2.நானுறங்க மடிவேண்டும்.
3.என்னவளே தரவேண்டும்.


வலிமையை அழிப்பவை

1.மனச்சோர்வு
2.சோகம்
3.கவலை

குட்டித் தத்துவம்

1.நண்பனைப் பின்னாலும் பகைவனை முன்னாலும் புகழ்.
2.நம்புவோர்க்கு உயிரையும் கொடு.
3.நன்றும் தீதும் நாமே கொணர்பவை.


பயமுறுத்தும் பயங்கள் 

1.கூட இருந்தே குழி பறிப்பது
2.எதிரில் சிரித்து புறம் பேசுவது
3.நம்பிக்கைத் துரோகம்

அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.முக்தி
2.முக்தி
3.முக்தி


கற்க விரும்புவது

1.ஓவியம்
2.நடனம்.
3.இசை


வெற்றி பெற வேண்டியவை 

1.இடைவிடா முயற்சி
2.நம்பிக்கை
3.இறையின் அருள்


சோர்வு நீக்க தேவையானவை 

1.இசை
2.நடனம்
3.குழந்தையின் சிரிப்பு


எப்போதும் தயாராக இருக்க வேண்டியது  

1.உதவும் மனப்பான்மை
2.அன்பு
3.இரக்கம்

முன்னேற்றத்திற்கு தேவை   

1.முயற்சி
2.இடைவிடாத முயற்சி
3.தளராத முயற்சி


எப்போதும் அவசியமானது 

1.உதவும் மனப்பான்மை
2.கருணை
3.அன்பு


பிடித்த தத்துவம் 

1.இதுவும் கடந்து போகும்
2.பசிவந்தால் பத்தும் பறந்து போம்
3.அன்பே கடவுள்


தெரிந்து தெரியாது குழப்புவது 

1.உயிர் தத்துவம்
2.மூளையின் செயல்பாடு
3.இறைவன் 


எரிச்சல் படுத்துபவர்கள்

1.வேளை கெட்ட நேரத்தில் போன்.
2.மற்றவர் மனநிலை புரியாமல் தொணதொணப்பது
3.செல்போன் விளம்பர காலர்கள்


மனங்கவர்ந்த பாடகர்கள் 

1.யேசுதாஸ்
2.எஸ் பி.
3.சி எஸ் ஜெயராமன்

இனிமையானவை 

1.அரட்டை அடிப்பது
2.கவிதை எழுதுவது 
3.மெல்லிசையில் பாடல்கள் கேட்பது.

சாதித்தவர்களின் பிரச்சனைகள் 

1.நேரமின்மை
2.மகிழ்ச்சியான தருணங்கள்
3.தனிமை இன்மை

பிடித்த பழமொழிகள்

1.வாழு வாழவிடு..!
2.நேரம் பொன் போன்றது
3.உழைப்பே உயர்வு தரும்.

 பதிவிட அழைக்கும் மூவர் 

1.செய்தாலி ( http://nizammudeen-abdulkader.blogspot.com/)
2. வித்யாசன் (http://vidhyasan.blogspot.com/)
3.தேனி சூர்யா பாஸ்கரன் 
http://www.thenisurya.blogspot.com/


அருமையான இந்த வாய்ப்பை நல்கிய மஞ்சுவுக்கு என் அன்பு நன்றிகள்..!

8 comments:

 1. முத்தான மூன்று முடிச்சு பதிவுகளை படித்தேன் மிக அருமை கலை....

  பிடித்த உறவுகளில் நட்பையும் இணைத்தது மிக அருமை...

  பிடித்த உணர்வுகளில் நட்புக்கு முதன்மையான இடம் தந்தமை சிறப்பு கலை....

  முத்தமிழ் மன்ற தளத்திலும் ஈகரை தளத்திலும் நீ நட்பு ஒன்றே போதும் நான் வாழ என்ற உன் கையெழுத்தின் அர்த்தத்தை இதோ இந்த முத்தான மூன்று முடிச்சு பதிவில் காண்கிறேன் கலை...

  பிடிக்காத உணர்வுகள் / துரோகமும் புறக்கணிப்பும் மிக மிக கொடியவை கலை... உண்மையே... புறக்கணிப்பை போன்றதொரு தண்டனை வேறெதுவுமில்லை....

  முணுமுணுக்கும் பாடல்கள் / எம் எஸ் அம்மாவின் பாடலில் மிக மிக விருப்பமான பாடல் இது எனக்கும்.. அது சரி கருணைக்கு எல்லை ஏதய்யா யாருப்பா அது பாடினவங்க??? :) இந்த பாட்டு கேட்கும்போது நீ கண்கள் மூடி கண்ணீரோடு ரசித்ததை நினைவு கூர்கிறேன் நண்பனே.... உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்த மானே கலா பாடினது தானே இது எப்படி கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டேன் பாத்தியா கலை?

  பிடித்த திரைப்படங்கள் / எம் ஜி ஆர் படங்கள் பிடிக்கும் என்பது மட்டுமா நீ எம் ஜீ ஆரின் தீவிர ரசிகன் என்பதும் தெரியுமே எனக்கு...

  அன்புத்தேவைகள் / மனதை நெகிழவைத்த வரிகள் கலை என்னப்பா ஐம்பது வயது ஆனதுமே முதுமை எட்டிப்பாத்துடுத்தா என்ன? ததாஸ்து நண்பனே.....

  வலிமையை அழிப்பவை / மனச்சோர்வு, கவலை, சோகம் அறிவேன் கலை... உன் வெற்றிகளுக்கு நீ எட்டமுடியாதபடி தடுப்பது இவை தான் என்று நான் அறிவேன். ஆனால் இறைவன் அருளுடன் நீ மீண்டு வந்து நலம் பெறுவாய் நண்பனே....

  குட்டித்தத்துவம் / தத்துவம்மட்டுமல்ல நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திய முத்துக்கள் இவை கலை...

  பயமுறுத்தும் பயங்கள் / இதில் நீ என் பேரை தான் போடுவேன்னு நினைச்சேன் கலை... ஏன்னா உயிர் எடுக்கும் தோழியாச்சே நான் அதனால் தான் :)

  அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள் / நீ எழுதிய முக்தி படிக்கும்போது நாம் இருவரும் எழுதிய மீராக்கண்ணன் பாடல்கள் நினைவுக்கு வருகிறது கலை.... கண்ணனின் பூரண அருள் கிடைத்து முக்தி கிடைக்க இறையிடம் என் பிரார்த்தனைகள் உனக்காக கலை...

  கற்க விரும்புவது / கலை எனக்கு வெண்பா சொல்லிக்கொடு நான் உனக்கு சங்கீதம் சொல்லி தருகிறேன்...

  வெற்றிப்பெற வேண்டியவை / ஆமாம் ஒன்றில்லையென்றாலும் வெற்றியின் இலக்கை எட்டமுடியாது என்பதை உணர்த்தும் வரிகள். எல்லாம் இருந்தாலும் இறைவனின் அருளும் வேண்டுமே.... அதுவும் சரியே...

  சோர்வு நீக்க தேவையானவை / குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்பதென்பது இது தானோ?

  எப்போதும் தயாராக இருக்க வேண்டியது / அன்பிருந்தாலே கருணை தானாகவே வந்துவிடுமே இரக்கம் தோன்றும்போது உதவும் இதயம் கண்டிப்பாக காத்திருக்கும் உதவிட....

  முன்னேற்றத்திற்கு தேவை / வெறும் முயற்சி மட்டும் போதாதென்று இடைவிடாது மனம் தளராது முயற்சிக்கவேண்டும் என்று ச்ன்னது சிறப்பு கலை...

  எப்போதும் அவசியமானது / மனிதனுக்கு முக்கியமானது மற்றவருக்கு உபயோகப்படுவது எப்போதும் உதவிட முன்பு நிற்பது அருமை கலை....நீ உதவிய பாங்கை நானே வியந்திருக்கிறேன்...

  பிடித்த தத்துவம் / இதுவும் கடந்து போகும் படித்தபோது ஏற்படாத தடுமாற்றம் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் படித்தபோது கொஞ்சம் மனம் கலங்கியது நிஜம். நீ சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் சட்டுனு கண்முன் வந்தது நிஜம் கலை :(

  தெரிந்து தெரியாது குழப்புவது / ஐயோ எனக்கு உன் வரிகளை படிக்கும்போதே தலை சுத்துதேப்பா...

  எரிச்சல்படுத்துபவர்கள் / மூணுமே எனக்கு தானே??? நினைச்சேன் எனக்கு தான்னு.... :) சரி போ இனிமே தொணதொணக்காம இருக்க முயற்சி செய்கிறேன்

  மனங்கவர்ந்த பாடல்கள் / காகரு சஜூனே... தொரகுனா இட்டுவண்ட்டி சேவா... விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே.... இந்த அருமையான பாடல்கள் பாடியவர்களும் சாக்‌ஷாத் இவர்களே தான்

  இனிமையானவை / எனக்கு தெரியும்பா எனக்கு நல்லாவே தெரியும் ஈகரைல அரட்டைக்கச்சேரிக்குன்னே தனியா நீ திரி தொடங்கினப்பவே தெரியும் :) கவிதை உன் மூச்சு இதுவும் தெரியும்... இசையே மனதை சாந்தப்படுத்துவதும் சமன் படுத்துவதும் சோகத்தில் இருந்து மீள வைப்பதும்...

  சாதித்தவர்களின் பிரச்சனைகள் / வித்தியாசப்பார்வை கலை உன்னுடையது

  பிடித்த பழமொழிகள் / நான் முதன்முதல் மன்றத்தில் உன் கையெழுத்தில் பார்த்தது வாழு வாழவிடு தான் அதன்பின் தான் நட்பே போதும் நான் வாழ அப்டின்னு நீ மாத்தினது...

  நீ பதிவிட அழைத்த மூன்று பேரும் வந்து இந்த முத்தான மூன்று முடிச்சு பதிவுத்தொடரை பதிவிட்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....

  கலை உன்னைப்பற்றி இன்னும் ஆழ அறிய முடிந்தது இந்த முத்தான மூன்று முடிச்சு பதிவு தொடரால்....

  உன் சிறப்பான சிந்தனையும் உன் அன்பான குணத்தையும் என்றும் என்னுடன் நல்ல நண்பனாக தொடர இறைவனிடம் என் அன்பு பிரார்த்தனைகள்... என் அன்பு வாழ்த்துகள் கலை உனக்கு...

  ReplyDelete
 2. :) என்னைப்பற்றி நீ அறியாததும் உண்டா என்ன..? உன் பாராட்டுக்கு நன்றி மஞ்சு..!

  ReplyDelete
 3. கலை அண்ணா
  உங்களின் மூன்று முடிச்சி
  மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முடிச்சி

  சிறந்த மனிதனாக வாழ நினைப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முடிச்சு

  ஒப்பற்ற அழுக்கற்ற நல்ல சிறந்த முடிச்சுக்கள்

  எதையும் குறிப்பட்ட சொல்ல முடியவில்லை
  உங்களின் எலா முடிச்சுக்களுமே சிறந்த முடிச்சு

  இதுவே கலை அண்ணாவின் உணர்வு மற்றும் எண்ணங்களின் முடிச்சு

  என்னோக்கிய அன்பு அழைப்பில் உங்களின் அன்பை உணர்கிறேன்
  மிக்க நன்றி கலை அண்ணா

  ReplyDelete
 4. அதானே என் நண்பனைப்பற்றி நான் அறியாதது உண்டா... உண்மையே கலை....

  ReplyDelete
 5. நெடுந்துVர பயணம் நம் வாழ்க்கை என்பது.. எப்போது எது நிகழும் என்றும் எப்போது யாது உயிர்ப்பிக்கும் என்றும் எவராலும் உரைக்கமுடியாத அதிசய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  உலகத்தில் ஜனித்த உயிர்கள் அத்தனையையும் நம் விழிகள் தடவி செல்ல முடிவதில்லை. சில முகங்கள் மட்டுமே நம் விழிகளில் தொற்றிக் உயிரோடு கட்டிக் கொள்ளும்....


  நாம் வாழும் வாழ்க்கை ஒரே ஒருமுறை தான். அதில்தான் எத்தனை வண்ண நுரைகள். நுரைக்க, நுரைக்க நாம் அத்தனையும் ஆழ்ந்து விடுகிறோம். எல்லா நுரைகளும் நமக்குள் வண்ணங்களை வார்த்து விடுவதில்லை. நீர் குமிழிகளாக உடைந்து விடக்கூடும் பல நுரைகள்..


  நிமிடம் நிமிடம் இடம் மாறும் இதயத்திற்கு நடுவிலும், எது வென்றாலும் வாங்கலாம் விலை கொடுத்து என்ற காலகட்டத்தில் தமிழ் மொழி மீதும், உறவுகளின் பிரம்மாண்ட அணிவகுப்பை செலுத்துவதிலும், வயதிலும், அறிவிலும் மூத்தவரான கலை அண்ணாவிற்கு எனது வணக்கங்கள்.


  மூன்று முடிச்சு...

  ஒருவரின் வாழ்க்கையின் முன் பகுதி, பின் பகுதி என்று பிரிக்கப்படுகிறது. அது முன்று முடிச்சுக்கு முன்பு பிறகு பின்பு. முடிச்சுகள் என்றாலே பிணைக்கப்பட்டது என்பது தான் பொருள்... பிரிப்பதற்கு சற்று சிரமம்தான் சிந்தித்தால் அது சிம்ம வாசம் தான்.


  1. பிடித்த உறவுகள்: எல்லோரைப் போலவும் உங்களுக்கும்

  2. பிடித்த உணர்வுகள்: இதுவும் எல்லோரைப் போலவும்

  3. பிடிக்காத உணர்வுகள்: எனக்கும் இது பிடிக்காது


  4. முணு முணுக்கும் பாடல்கள்: முதல் இரு பாடல்கள் உங்கள் உதடு உலகத்தில் உலா வரும் வரிகள்.. 3வது பாடலில் உங்களுக்கு ஒரு உயிர்ப்பு இருக்கிறது. உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்.. தஞ்சை மாவட்டம் தொட்டு செல்லும் கும்பகோணம் எனும் ஊரில் உங்களது தஞ்சம் (உயிர்ப்பு) என்பதால் மிக்க மகிழ்ச்சி அந்த பாடல் உங்களுக்கு பிடித்தமைக்கு.


  5. பிடித்த திரைப்படங்கள்: இவர்களின் படங்களை பிடிக்காது என்று சொல்லும் உதடுகள் ஒன்று கூட இல்லை.

  6. அன்புத் தேவைகள்: இறுதியில்தான் அதன் இறுமாப்பும், இன்பமும் நன்று.


  7. வலிமையை அழிப்பவை: இன்னும் நிறைய இருக்கு இதுவும் கூட...


  8. குட்டித் தத்துவம்: அறிந்தவை அறுசுவை


  9. பயங்கள்: இதை விட நாக்கு வாளாக மாறுவதே... நான் பயப்படுவது.


  10. அடைய விரும்பும் விருப்பங்கள்: இது தான் முழுமையான சக்தி


  11. கற்க விரும்புவது: இசை சொல்லி கொடுக்க முடியும். ஆனால் குயில்கள் குற்றம் கண்டு பிடித்துவிடும். ஓவியம் தெரியும். நடனம் தனிமையில் மட்டும்.


  12. வெற்றி பெற வேண்டியவை: 3ம் முக்கியம்.

  13. சோர்வு நீக்க தேவை: ஆமாம்...

  14. தயாராக இருக்க வேண்டியது: இது வேண்டியவைதான். மகிழ்ச்சி.


  15. தேவை: விடும் முச்சு போல முயற்ச்சி ஒட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.


  16. அவசியமானது: இது ஏற்கனவே 14ல் சொல்லப்பட்டவையே

  17. தத்துவம்: 3ம் மகத்துவம்.

  18. குழுப்புவது: குழப்பம் இல்லையயன்றால் உலகில் ஏதும்மில்லை. குழப்பம் என்பது குழப்பத்தின் விளக்கமாகும். அந்த விளக்கத்தை மீண்டும் குழுப்பி பார்ப்பதும் குழும்பியது விடையறிவதற்குள் மற்றொரு குழுப்பம் பிரசவிப்பதும் குழுப்பம். ஓகே... எனக்கு குழுப்பி தெளிஞ்சுருச்சு.


  19. எரிச்சல்: அண்ணாவிற்கு செல்போனால் பல தொல்லைகள் போல.

  20. இனிமை: ஐ அழகு

  21. சா.பிரச்சனைகள்: ம்ம்..... சரியா எனக்கு தெரியல நா இன்னும் சாதிக்கல. சாரி..

  22. பழமொழி: அருமை.

  நன்றி .உங்களது அழைக்கும் ஒரு விரலாய் நானும் இருப்பதற்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. மிக்க நன்றி செய்தாலி...!

  மிக்க நன்றி வித்யாசன்..!

  ReplyDelete
 7. முத்தான மூன்றுகளும், மஞ்சுபாஷினியின் பின்னூட்டமும் வெகு அருமை.

  ReplyDelete
 8. உங்களின் மூன்று முத்தானமுடிச்சு மிக அருமை அண்ணா..மிகச்சிறந்தவர்களின் எண்ணங்கள் இது போலவே இருக்கும்...ஒவ்வொரு முடிச்சும் அழகான பின்னப்பட்டு உள்ளது.என் செல்ல அக்காவின் ரசித்து எழுதிய பின்னுட்டம் மிக அருமை.. நேரமின்மையால் இருமுறை வந்து படித்தும் பின்னுட்ட முடியவில்லை..இன்று தான் என் மூன்றுமுடிச்சு எனது வலைப்பூவில் பதித்துள்ளேன்..www.thenisurya.blogspot.com

  ReplyDelete