எங்கே போகிறோம்..?

கலை வளர்த்த தமிழகத்தில் கல்விக்கு
உலை வைக்கும் நிலை இன்று..!
நீதி மான்களின் கண்களில்
விவாதப்புல்வெளிகள்..
பாதியாய்போனது கண்கட்டிய
நீதிதேவதையின் அரையாடை..
மீதியும் போவதற்குள்
மீட்போன் வருவானா..?
என்றேனும் வழி பிறக்கும் ஏழையின் சிரிப்பில்
இறைவன் விழி திறக்கும் என்றெல்லாம்
நன்றே சொல்லி வழக்கின்றி போகும்
சில அறிஞர்களால்
நம்பிக்கை ஒளி வீசினாலும்
சுவிஸ் வங்கியில் சிறுத்தைகளின் சேமிப்புகள்
புயல்காற்றாய் விளக்கணைக்கிறது..
நாலு பேர் கத்திச்சொன்னால்
நாயம் தான் என்று நாறபது பேரின்
நாவடைக்க வைக்கும் அரசியல் களம்..
விலை போகாத அரசியல்வாதி
உண்டா இல்லையா என்னும்
பட்டிமன்றம் நடக்கிறது தினமும்..!
எங்கே போகிறோம் நாம்..?

கலை வளர்த்த தமிழகத்தில் கல்விக்கு
உலை வைக்கும் நிலை இன்று..!
நீதி மான்களின் கண்களில்
விவாதப்புல்வெளிகள்..
பாதியாய்போனது கண்கட்டிய
நீதிதேவதையின் அரையாடை..
மீதியும் போவதற்குள்
மீட்போன் வருவானா..?
என்றேனும் வழி பிறக்கும் ஏழையின் சிரிப்பில்
இறைவன் விழி திறக்கும் என்றெல்லாம்
நன்றே சொல்லி வழக்கின்றி போகும்
சில அறிஞர்களால்
நம்பிக்கை ஒளி வீசினாலும்
சுவிஸ் வங்கியில் சிறுத்தைகளின் சேமிப்புகள்
புயல்காற்றாய் விளக்கணைக்கிறது..
நாலு பேர் கத்திச்சொன்னால்
நாயம் தான் என்று நாறபது பேரின்
நாவடைக்க வைக்கும் அரசியல் களம்..
விலை போகாத அரசியல்வாதி
உண்டா இல்லையா என்னும்
பட்டிமன்றம் நடக்கிறது தினமும்..!
எங்கே போகிறோம் நாம்..?
ஏழைகளுக்கு கல்விக்கண் திறக்க ஒரு பக்கம் ஒருசாரார் போராடிக்கொண்டிருக்க...
ReplyDeleteஇங்கே அரசியல்வாதியோ இதை வைத்து பகடைக்காய் உருட்டிக்கொண்டிருக்க....
கல்வியோ உச்சநீதி மன்றத்தில் மடிப்பிச்சை ஏந்தி
கல்வியை கற்பழித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை நொறுக்கிய அதிர்ச்சியில் ஒரு நேர்மையான ஆசிரியரான உன் வரிகளின் தீட்சண்யம் காணமுடிகிறது கலை….
வேதனை தான் மிஞ்சுகிறது… அரசியல்வாதிகளின் சூதாட்டத்தில் திரௌபதியின் நிலையாய் கல்வி இங்கே மன்றாடுகிறது நீதி கிடைக்குமா என்று…..
உன் வரிகளின் தாக்கம் மனதை அதிரவைக்கிறது கலை..
சிறப்பான வைர வரிகளாக மின்னும் கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள் கலை……
அன்று கற்பை காப்பாற்ற கண்ணன் வந்தான்...
ReplyDeleteஇன்று கல்வியை காக்க யார் வருவார் என்ற உன் வேதனை வரிகள் என்னையும் தாக்குகிறது....
நல்லதை செய்ய முன்வரவில்லை என்றாலும் இப்படி எல்லாவற்றிலும் களங்கத்தை புகுத்திய அரசியல்வாதிகள் கல்வியையும் விட்டு வைக்கவில்லை என்ற நெஞ்சறுக்கும் வரிகளை படிக்கும்போது வேதனை மட்டுமே மிஞ்சுகிறது கலை...
நீ நேர்மையான ஆசிரியன் என்ற முறையில் மட்டுமல்லாது எதிர்காலம் கல்வியின் கதி என்னாகுமோ என்று மனம் பதைத்து நீ வரைந்த வரிகள் அதற்கு பொருத்தமான படமும் மிக சிறப்பு கலை... ஹேட்ஸ் ஆஃப் கலை....
அன்பு வாழ்த்துகள்....
கவிதைகள் இன்னும் இன்னும் மலரட்டும் உன் அன்பு சோலையில்..... தீயவை எல்லாம் எரிந்து போகட்டும் உன் தீட்சண்ய வரிகளால்... நல்லவை எல்லாம் செழிக்கட்டும் உன் அன்பு வரிகளால்....
உடனுக்குடன் கவிதைக்கு பாராட்டும் சிறந்த அணிந்துரையும் வழங்கிய உன் அன்பை நினைத்து அகமகிழ்கிறேன் மஞ்சு..! நன்றி சொல்லி அன்னியம் ஆக விரும்பவில்லை..!
ReplyDeleteகல்வியும் கற்பும் கடைத்தெருவில் நிற்கின்றது.
ReplyDeleteஇந்தக் கவலைதீர்க்க யார்வருவார் என்று புலம்பும்
மனதில் இருந்து கவிதை மழையெனப் பொழிவது
தங்கள் கருத்தினில் துலங்குகிறது.வாழ்த்துகள்
பொறுப்புணர்வுமிக்க கவிதைவரிகளால் பிறர்
நலன்காக எடுத்த முயற்ச்சிகள் வெற்றிபெற.........
உங்கள் வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.. விரைவில் உங்கள் ப்ளாக்கை பார்வையிட வருகிறேன்..
ReplyDelete