
தொலைவில் இருந்தும்
தொலைக்காத காதலும்
விலையிலா வார்த்தையில்
வழங்கிடும் வாஞ்சையும்
கலைத்துவிட்ட தலையைக்
கோதிய வருடலும்
மலைக்க வைத்ததோர்
மனங்குளிர் முத்தமும்
தொலைத்துத் தேடும்
சில சிறு ஊடலும்
மலையளவு சோகம்
குறைத்த கூடலும்
கலைந்த கூந்தலைக்
கோதிடும் காதலும்
குலைந்த ஆடையைக்
கண்டபின் நாணமும்
சிலையாய்க் கண்டு
வியந்த கோலமும்
நிலைத்து நிற்குமே
பசுமையாய் நெஞ்சிலே..!
காதல் தொடரும் ..!
நண்பர்களே..
ReplyDeleteஎனது காதல் சில குறிப்புகளுக்கு மிகப்பலத்த வரவேற்பு இணையத்தில் கிடைத்ததை ஒட்டி மீண்டும் காதலை மையமாய் வைத்து ஒரு தொடர் எழுதும் முயற்சி இது.
ஆதரவு எப்படி என்று அறிந்து மேலும் தொடர எண்ணம்..!
நன்றியுடன்
கலை
காதல் குறிப்புகள் கவிதைகள் இன்றும் படிக்க தோன்றும் மிக அருமையான வரிகள் கலை...
ReplyDeleteஅதென்ன உன் விரலுக்கு வரிகள் வசப்படுகின்றதா? சொன்னபடி மை முழுதும் காதலாய் வழிந்து வரிகளாய் விகசிக்கிறதே....
அசத்தலான தலைப்பு சரியாய் உணர்ந்து படித்தால் ஒரு அர்த்தம்... மேலோட்டமாக வாசித்தால் அர்த்தமே அனர்த்தமாகிவிடும் தலைப்பு.. எப்பவும் நீ இப்படி வித்தியாசமாக சிந்திப்பதால் தான் தலைப்புகளும் வித்தியாசமாகவே படைக்கிறாய் கலை...
காதலில் ஊடலும் கூடலும் சகஜம் தானே.....
நிலைத்து இருக்கும் காதலில் ஊடல் அப்பப்ப இருந்தால் தான் திகட்டாமல் இருக்கும் காதலும்....
தலைகோதிவிடும் காதல் நல்ல அருமையான சிந்தனை....
அன்பின் பரிமாற்றமே இரு மனங்களின் பிரவாகமான காதல்.....
காதலை என்றும் போற்றி போற்றி எழுதுகிறாயே உன் திருமணவாழ்க்கை காதலுடன் தொடங்கியதால் தானோ கலை?
சமுதாய கவிதைகள் சாடுவதை தவறுவதில்லை....
காதல் கவிதைகளோ மனதை மயிலிறகாய் வருடுவதை தவிர்க்க முடியவில்லை....
அன்பும் காதலும் நிறைந்த வாழ்க்கை என்றும் உனக்கு அமைந்திட நீயும் அன்பு கவிதைகள் சளைக்காது சொறிந்திட என் அன்பு வாழ்த்துகள் கலை....
உள்ளம் ஒன்றுபட்டு இணைந்தபின் தூரம் ஒரு பொருட்டே அல்லவென்று அழுத்தமாய் சொன்ன வரிகள் சிறப்பு கலை...
ReplyDeleteநம்மிலிருந்து வரும் வார்த்தைகள் எப்போதும் அன்பாய் தலைகோதுவாய் இருந்துவிட்டாலே வீட்டில் பிரச்சனைகளே உருவாகாமல் தடுத்துவிடலாம் என்று உன் வரி ஊடே அறிய முடிகிறது கலை....
காதலில் பிரச்சனை ஆரம்பிப்பதே ஈகோ இருவருள் தொடங்கிவிடுவதால் தான்... நீ பெரிதா நான் பெரிதா என்று மனதில் முளைத்துவிட்டால் அங்கே மிஞ்சி இருப்பதோ சோகமும் கோபமும் சண்டையுமாகிவிடும்....
காதலில் சின்னக்குழந்தையின் குறும்புத்தனம் இருக்கலாம்.. சின்ன சின்ன ஊடல் இருக்கலாம்.. ஆனால் ஊடல் தொடங்கியதுமே இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து இறங்கி வந்து மற்றவரை சமாதானப்படுத்திவிட்டால் ஊடல் கூட காக்கா ஊச்....
தென்றலாய் குளிர்ச்சாரலாய் மழைத்துளியில் நனையும் மனமாய் வரிகள் மிக அருமை கலை...
அன்பு வாழ்த்துகள் தொடர்ந்திடு இதுபோன்ற அழகிய அருமையான படைப்புகளை...