
2.
தொட்டுப் பரவிய
இனிய சாரலாய்
பட்டும் படாமலும்
அணைத்திட்ட தழுவலும்
விட்டும் விடாமலும்
மழையின் தூறல்போல்
சொட்டும் காதலில்
சொக்கவைத்த முத்தமும்
கட்டிய குழலது
காற்றில் பறந்திட
பட்டுக்கழுத்தினில்
பதிந்திட்ட ஈரமும்
மொட்டாய்க் கூம்பிய
முகமது மலர்ந்திட
கட்டியணைத்துக்
கூறிய கதைகளும்
விட்டகுறை தொட்டகுறையாய்
விரிவாய்ப்பேசிய காதலுரைகளும்
எட்டப்போயினும்
ஏங்கிட வைத்ததே..!
சொல்லாடலுடன் ஒரு கவியாடல்....
ReplyDeleteகாதலை சொல்லி சொல்லி செல்கிறது....
கல்லூரிக்காலத்தில் தொடங்கிய உன் காதல் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என்ற உன் பரவசமான வரிகள் சொல்லுகிறது.....
காதலில்லாத வாழ்க்கை
மழையில்லாத மேகம் போன்றது...
நீ உன் வாழ்க்கையை ரசித்து கடத்தும் நொடிகளை தான் இங்கு வரிகளாய் படைக்கிறாய் என்று அறியவும் முடிகிறது கலை....
அசத்தல் வரிகள் ஒன்றை ஒன்று விஞ்சுகிறது...
அன்பு வாழ்த்துகள் கலை தொடர்ந்திடட்டும் காதல் வரிகள்....