Sunday, September 4, 2011

குருடர் படித்த யானை..

குருடர் படித்த யானை..

படம்

பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன்.
விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்..!


முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம்
அன்னவர்க் கோஒரு தலைவனோ டைவராம்
முன்னரும் பின்னரும் யானையைக் கண்டிலர்
என்னசெய் வரவகக் கண்ணிலும் குருடராம்..


அந்தோ ஒருநாள் யானையைக் கண்டிட
சந்தோ ஷமுடனே வேகமாய்ச் சென்றனர்
முந்திய னொருவன் களிறினை முறமென
பிந்திய குருடனோ தூண்வா ரணமென..


ஆங்கே மூன்றா மவனும் செப்பினன்
தூங்கா விளக்கே கவின்மிகு யானையும்,
நான்கா மவனுக் கோர்வேழமே நாகமாம்
ஐந்தா மவனோ அனைத்துமே தப்பென


யானை என்பதோ தெருநா யென்றனன்
பானை போன்றொரு வயிற்றுடன் வலம்வரும்
பூனை போன்றொரு திருடனே யானையாம்
வானை யொத்ததோர் ஆனையோ சிரித்தது..


குருட்டுக் கூட்டணி திருட்டெனக் கூறிடின்
பெருமதி யுடையோர் தாழ்வரோ என்றுமே..?
பெருமைக் குரியதோர் ஞாயிறும் சீறுமோ
கருகியே ஞமலியும் குரைத்திடின் கதிரினை..?


ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர்..!

14 comments:

  1. மிக பழைய கதை ஒன்றை இந்த யானைக்கதை கவிதையாக்கி வேதனை வரிகளாக நீ படைத்திருக்கிறாய் கலை.....

    கதை தான் சொல்கிறாயோ என்று நினைத்தே படிக்க ஆரம்பித்தேன்....ஆனால் படிக்க படிக்க கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை :(

    கம்பீரத்திற்கு உதாரணமாக சிங்கத்தை மட்டுமல்ல யானையையும் சொல்வதுண்டு....

    யானை எப்போதும் சிறப்பு தான் அதன் தனித்தன்மையால் அது அடையும் சிறப்பு.....நீயும் அது போல தான் கலை....

    யானையின் ஒவ்வொரு பாகத்தை தொட்டுப்பார்த்து யானையின் முழு உருவமே இப்படி தான் அப்டின்னு குருட்டுத்தனமா நினைக்கிறாங்கன்னா அவங்க குருடர்கள் அதனால அப்படி நினைக்கிறாங்க... அதில் தப்பு கண்டிப்பா இல்லை...

    ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு என்னவாயிற்று? நல்லது எது கெட்டது எது என பகுத்தறிந்து ஆராய்ந்து சீர் படுத்தி பார்க்க தெரியாதா?

    இறைவன் மனிதனுக்கு கொடுத்த நல்லறிவை நல்லவிதத்தில் பயன்படுத்தி நல்லவர் யார் நல்லது செய்பவர் யார் நேர்மையானவர் யார் என்று ஆராய்ந்து பகுத்தறிந்து அதன்படி செயல்பட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும்...

    ஆனால் அப்படி செயல்படவிடாமல் தடுக்க முயலும் தீய சக்திகள் அடுத்திருந்து போதனை செய்துக்கொண்டிருக்கும்போதும் தன் நிலை இழந்துவிடாமல் நல்லதை தேர்ந்தெடுக்கும் திண்மை வேண்டும் என்று நல்லறிவுரையாய் உன் வரிகள் உணர்த்துகிறது கலை...

    வரிகளில் இருக்கும் வேதனை கண்ணீர் வரிகளாகவே என் கண்ணுக்கு தெரிகிறதுப்பா :(

    குருட்டு கூட்டணி திருட்டு என கூறினாலும் அறிவிற் சிறந்தோர் தாழ்ந்துவிட மாட்டார்கள் கண்டிப்பாக...
    சூரியனின் சிறப்பை அதன் மகத்துவத்தை அறியாதோர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டுமே....

    ஞாயிறு என்று இங்கே குறிப்பிட்டது சுட்டெரிக்கும் சூரியனை.... அதற்கு இருக்கும் சக்திக்கு எரித்துவிடும்... ஆனால் தன் தகுதியை குறைத்துக்கொண்டதில்லை சூரியன்....

    ஞமலி என்று சொன்னது இங்கே நாய்தானே?
    சூரியனை பார்த்து நாய் குரைப்பதால் சூரியனின் சிறப்பு அழிவதில்லை... குரைத்து குரைத்து நாய்க்கு தான் தொண்டை புண் ஆகும்....

    கற்றோர் பண்பட்டோர் மேன்மை உடையோர் அதன்படியே வாழ்வர்.... ஆமாம் அதிகம் கற்றவர் மேன்மக்கள் மேன்மக்கள் என்றுமே அமைதியாக தானிருப்பார்கள்... அதனால் தான் சான்றோர் சிறப்பதும்......

    அடுத்தவர் சொன்ன பேச்சை கேட்டு முடிவெடுப்பதும் தானாக சிந்தித்து நடக்க முடியாத நிலையில் இருப்பதும் எத்தனை படித்து என்னப்பயன்? இப்படி தானாக சிந்தித்து முடிவெடுக்காதபோது இதனால் சான்றோரின் பெருமை குறைவதில்லை....ஆனால் இன்று இட்டுக்கட்டி பேசுவோர் நாளை சொல்லிக்கொடுத்தவரைப்பற்றியே முதுகுக்குப்பின் பேசும் நிலை வந்து அவர்கள் நிலை தான் தாழும்....

    ஆனால் யானை எப்படி கம்பீரம் இழப்பதில்லையோ அதேப்போல் ஆன்றோரின் புகழும் மறைவதில்லை...

    கவிதை எழுத மனம் சந்தோஷத்தில் இருக்கவேண்டும் அல்லது சோகத்தில் இருக்கவேண்டும்....

    ஆனால் இந்த கவிதை வரிகள் அடிப்பட்ட ஒரு அன்பு மனம் வேதனையில் பகிர்ந்த கண்ணீர் முத்துக்களாக தான் இங்கே மிளிர்கிறது....

    யானையின் பெருமை என்றும் மங்குவதில்லை... யானையின் ஒரு பக்கம் மட்டும் பார்ப்பது இஷ்டத்துக்கு அவரவர் எண்ணம்போல பகிர்ந்தாலும் யானை தாழ்வதில்லை.....

    குருடர்கள் யானையை எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்.... ஆனால் உன்னில் இருக்கும் நல்ல குணத்தையும் அன்பையும் முழுமையாக அறிபவரே உன் மனதில் நிலைத்து இருப்பர்....

    அருமையான கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துகள் கலை...
    September 5, 2011 12:15 AM

    ReplyDelete
  2. நல்லறிவுரை வரிகளாக அதையும் பட்டுப்பூவாய் பகிரும் முத்துக்களாக மென்மையாக வரைந்துள்ள கவிதையாக புதுமை படைத்திருக்கிறாய் கலை....

    பழைய யானைக்கதை தானே அப்டின்னு நினைச்சு படிக்கும் வாசகர்களுக்கு கடைசி ரெண்டு பத்தியும் அருமையாய் உணர்த்தும் அழகிய புதுமையான இவ்வரிகள்....

    அன்பு வாழ்த்துகள் கலை...

    ReplyDelete
  3. தினம் ஒரு கவிதை வரையலாமே கலை நீ?

    அருமையாய் உன்னில் இருக்கும் இந்த திறமையை கவிதைகளாக இங்கே மலர வைக்கலாமேப்பா நீ....

    உன் கவிதைகளை எதிர்ப்பார்க்கும்....

    ReplyDelete
  4. கலையின்பதிவுக்கு இதைப் பின்னூட்டமாக இடுங்கள்.


    ///கம்பீரத்திற்கு உதாரணமாக சிங்கத்தை மட்டுமல்ல யானையையும் சொல்வதுண்டு....

    யானை எப்போதும் சிறப்பு தான் அதன் தனித்தன்மையால் அது அடையும் சிறப்பு.....நீயும் அது போல தான் கலை....///

    ஐந்தறிவு படைத்த சிங்கம், யானையாக இருப்பதைவிட ஆறறிவு படைத்த முட்டாள் மனிதனாக இருப்பது மேல். முடிந்தால் இப்படி மிருகமாக இல்லாமல், மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  5. அனானிமஸ் என்ற பெயரில் வந்து நான் சொன்ன வரியை இங்கே காட்டி நீங்க சொல்ல வந்ததை என்னால புரிஞ்சுக்க முடியலையே....


    கலைப்பற்றி நான் அறிந்தவரை நல்ல மனிதர்.... யாருக்கும் மனசால் கூட கெடுதல் செய்ய நினைக்காதவர்....

    நான் கலையை மிருகமாக இருக்க சொல்லலையே... கலையின் அன்பும் நேர்மையும் நானறிவேன்...மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் முடிந்தவரை இதோஉங்களை போல முகத்தை மறைத்துக்கொண்டு வந்து மனதை புண்படுத்தும் வரிகளை இடாமல் நல்ல மனிதராகவே தான் இருக்கார் கலை என்று பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன் சகோதரா/சகோதரி....

    கலை மேல் ஏன் அத்தனை கோபம் அல்லது வெறுப்பு உங்களுக்கு இப்படி எழுத காரணம் நான் அறியலாமா? :(

    ReplyDelete
  6. கலையினை நான் மதித்தே வந்துள்ளேன் ஈகரை தளத்தில் இருந்து வெளியேறிய உடன் சேனை தமிழ் உலாவில் இணைந்ததும் அவரின் மீது இருந்த மதிப்பு இப்பொழுது இல்லை.ஈகரையில் இருந்த பொது இவ்வாறு அவர் செய்திருப்பாரா

    ReplyDelete
  7. அன்பின் சகோதரா/சகோதரி,

    ஈகரை தளத்தில் இருந்தப்பவும் அவர் நேர்மையில் இருந்து தவறவில்லை.... ஆனாலும் அவர் மனம் புண்படும்படியாக எத்தனையோ நிகழ்வு.... எல்லாம் பொறுத்துக்கொண்டு அன்பின் தம்பி சிவாவுக்காகவே தான் இருந்தார்.... ஆனால் அவர் நேர்மையையே சந்தேகப்பட்டபோது தான் அவர் ஈகரையை விட்டு மனம் வேதனைப்பட்டு விலகினார்....

    ஈகரையில் இருந்தவரை அவர் ஈகரைக்கு துரோகமான செயல் எதுவும் செய்ததில்லை தானே?

    ஈகரை விட்டு விலகியபின் அவர் எங்கு போனாலும் அது அவர் விருப்பம்தானேப்பா?? அது தவறா சொல்லுங்க?

    நீங்க சொன்ன வழிக்கே வருகிறேன்... ஈகரையில் இருந்தவரை அவர் சேனை தமிழ் உலாவில் சேரவில்லை தானே?

    ஈகரை விட்டு விலகியப்பின் ஒரு கர்ட்டசிக்காக கூட கலைக்கிட்ட சிவா தம்பி பேசலை என்ற மனவருத்தம் இருக்குப்பா இன்னமும்... ஆனால் கலை அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்....

    அவர் ஈகரையில் இருந்தவரை முத்தமிழ் மன்றம்தவிர வேறு எந்த தளமும் போகவில்லை...

    ஈகரை விட்டு விலகியப்பின் அவர் எங்கு போக விருப்பம் இருக்கோ அங்கு போக அவருக்கு எந்த வித கட்டுப்பாடும் இனி இல்லை தானேப்பா?

    ReplyDelete
  8. ஈகரையின் இருந்து பிரிந்தவர்கள் ஆரம்பித்த தளம் தானே அது அது மட்டுமின்றி ஈகரையின் நிறுவனர் பற்றி தரக்குறைவாக அவர்கள் எலுதிய கடிதமும் தாங்கள் அறிந்ததே மேலும் கலை அவர்களால் ஈகரையில் இருந்து வெளியே அனுப்பட்ட யாதுமானவள் அங்கே புரட்சி கவிஞராக இருக்கிறார் காரணம் உங்களுக்கே தெரியும் அவர் இருக்கும் இடத்திர்க்கு இவர் போய் உள்ளரே ஈகரயில் இதுவரை கலை அவர்கள் பதிவிக்காக மட்டும்தான் இருந்தாரா அப்படி இல்லையெனில் அங்கே யென பிரச்சினை என கூற சொல்லுங்கள்

    ReplyDelete
  9. உனது அன்பான விமரிசனத்திற்கு நன்றி மஞ்சு..

    வேறு என்னை விமரிசிக்கும் எந்த கருத்துக்கும் நான் பதில் சொல்லப்போவது இல்லை. அவசியமும் இல்லை எனக்கருதுகிறேன்..!

    ReplyDelete
  10. அண்ணா காலம் பதில் சொல்லும் நீங்கள் செய்தவை அதிகம் அவற்றில் ஒன்றேனும் உங்களுக்கு உறுதுணையாக அமையும்
    யாரும் சொலலும் அபாண்டங்களுக்கு வருந்த வேண்டாம்
    அத்தனைக்கும் காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
  11. //Anonymous said...
    ஈகரையின் இருந்து பிரிந்தவர்கள் ஆரம்பித்த தளம் தானே அது அது மட்டுமின்றி ஈகரையின் நிறுவனர் பற்றி தரக்குறைவாக அவர்கள் எலுதிய கடிதமும் தாங்கள் அறிந்ததே மேலும் கலை அவர்களால் ஈகரையில் இருந்து வெளியே அனுப்பட்ட யாதுமானவள் அங்கே புரட்சி கவிஞராக இருக்கிறார் காரணம் உங்களுக்கே தெரியும் அவர் இருக்கும் இடத்திர்க்கு இவர் போய் உள்ளரே ஈகரயில் இதுவரை கலை அவர்கள் பதிவிக்காக மட்டும்தான் இருந்தாரா அப்படி இல்லையெனில் அங்கே யென பிரச்சினை என கூற சொல்லுங்கள் //


    நீங்க யாருன்னு எனக்கு தெரியலை தம்பி....
    ஆனாலும் நீங்க இத்தனை சொன்னதுக்கு நிதானமாவே சொல்றேன்பா...

    ஈகரைல இருந்து பிரிஞ்சு வேற தளம் அமைச்சுக்கிட்டது அவரவர் விருப்பம்பா... அதை நான் எதுவும் சொல்லலை.... ஆனால் பிரிந்து சென்றபின் ஈகரைப்பற்றியோ ஈகரை நிறுவனர் பற்றியோ தவறாக கடிதம் எழுதியது கண்டிப்பா தவறே அதை நான் ஒத்துக்கொள்கிறேன்... ஆனால் அப்படி நான் செய்யலை அக்கா அப்டின்னு அழுதுகிட்டு எனக்கு போன் செய்து சம்ஷுதின் சொன்னார்... அக்கா என் குழந்தை சாட்சியா நான் சிவா அண்ணனை பற்றி தப்பா எதுவுமே எழுதலை அக்கா... சிவா அண்ணனுக்கு போன் செய்து என் தவறின்மையை நிரூபிக்க போன் செய்தால் எடுக்கவும் இல்லக்கா அப்டின்னு அழுதார்.... யார் சொன்னது நிஜம் யார் சொன்னது பொய் என்பதை நான் கடவுள் கிட்டயே விட்டுட்டேன்பா அன்னிக்கே....

    கலை அவர்களால் யாதுமானவள் தடை செய்யப்பட்டதுக்கு காரணம் கலையையோ அல்லது என்னையோ தரக்குறைவாக யாதுமானவள் ஈகரையிலும் தன் பிளாக்ஸ்பாட்லயும் கேவலமா எழுதினதால் இல்லப்பா.... ஈகரையில் அவங்க போட்ட பதிவுகள் அவங்க வார்த்தைகள் செயல்கள் இது ஈகரை விதிக்குட்பட்டு மட்டுமே தடை செய்தார்...

    சேனையில் அவங்க புரட்சி கவிஞரா இருக்காங்கன்னா அது அவங்க படைப்புகளுக்கு சேனை கொடுத்தது. அதுக்கும் கலைக்கும் என்ன சம்மந்தம்பா?

    இத்தனை வயது மூத்தவர் மன நிம்மதியில்லாமல் இன்னிக்கு இப்படி இருக்க காரணம் ஈகரையில் அவருக்கு நடந்த அவமானங்களும் வேதனைகளும் தாம்பா... பதவி எதிர்ப்பார்த்து கலை இதுவரை எந்த காரியமும் செய்யலை...

    சேனையில் பதவி எதிர்ப்பார்த்து போகலை.... மனநிம்மதி இல்லாம இவர் போட்ட பதிவுக்கும் சிவாவுக்கு இவர் போட்ட மெயிலுக்கும் இதுவரை பதிலும் இல்லை... ஹூம்.... எத்தனை உழைத்தாலும், எத்தனை நேர்மையாக இருந்தாலும் இறுதியில் கிடைப்பது அவமானமும் அவமதிப்பும் வேதனையும் மட்டுமே :(

    எங்குமே கலை பதவி கேட்கவில்லை எதிர்ப்பார்க்கவும் இல்லைப்பா.... பதவிக்காக எதுவும் செய்ததும் இல்லை :( ஹூம் இந்த வரி படிக்கும்போது கலை என்னிக்கோ சொன்னதை நினைச்சு பார்க்கிறேன்...

    தலைமை நடத்துனர் பதவியில் இல்லாமலயே நல்லது செய்யனும்னு தான் மஞ்சு எனக்கு விருப்பம்... ஆனால் சிவா என்னை நம்பி எனக்கு தந்த பொறுப்பை நான் நல்லபடி செய்துட்டு இருக்கேன்... ஈகரை விட்டு விலகும் வரை அவர் தன் பொறுப்பில் இருந்து பிறழலைப்பா.. எந்த தவறான காரியங்களும் செய்யலை.... தவறு செய்யாம களங்கத்துடன் வெளியே வந்தார் கலை :(

    பிரச்சனை எதுவுமே இல்லப்பா ஈகரையில்....

    அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி என்னைக்கும் கலைக்கும் எனக்கும் சிவா மேல் கோபமோ சண்டை வளர்க்கும் எண்ணமோ ஈகரையை கெடுக்கும் சிந்தனையோ இல்லப்பா....ஈகரை நல்லாருக்கவே தான் அப்ப பாடுபட்டார்... இப்ப அவர் விருப்பமும் அதுவாகவே தான் இருக்கும்.... ஆனால் சிவா கலையை :( நம்பலையே கலை செய்யாத தவறை செய்ததா நினைத்துக்கொண்டிருக்கிறார் சிவா தம்பி...:(

    இந்த வேதனை கலைக்கும் எனக்கும் என்னிக்கும் இருக்கும்... :(

    ReplyDelete
  12. அருமை பாராட்டுக்கள் நண்பரே

    ReplyDelete
  13. கருத்துரைகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே..!

    ReplyDelete