Saturday, April 3, 2010

மலரும் வண்டும்...























மலரும் வண்டும்...


மலருக்கு மலர் தாவும்
வண்டினைக் கண்டதுண்டு...

வண்டுக்கு வண்டு தாவும்
மலரினைக் கண்டதுண்டா...?

எம்மலர் சிறந்ததெனத் தேர்ந்தெடுத்து
தேன்குடிக்கும் வண்டுக்கோ
மலரின் வலிகள் புரிவதில்லை...

வண்டுதாவும் மலர்களுக்கும்
வண்டின் ரணம் புரிவதில்லை...

ஒற்றைக்காலில் தவமிருக்கும்
ஒற்றை மலருக்கு
வண்டின் எத்தனம் புரிவதில்லை...


மகரந்தப் போதையில் மூழ்கி
மலருக்காய் உயிர்கொடுத்த வண்டுக்கோ
மலரின் மெத்தனம் தெரிவதில்லை..


வண்டுகளின் போதையில்
வாட்டமாய் மயங்கி விட்ட
மலருக்காய் ஏங்கி விட்ட
வண்டுக்கோர் அஞ்சலி...!

1 comment:

  1. அன்பு கலை,

    வித்தியாசமான கவிதை...

    ஆழ்ந்த சிந்தனை...

    மலருக்கு மலர் தாவும் வண்டு என்ற கோட்பாட்டை தகர்த்தெறிந்து மிக அழகாய் நியாயப்படுத்திய வரிகள்...

    உன் கவி என்னும் தேனில் ஊறியப்பின் எந்த மலரும் மற்ற வண்டு தேடி ஓடாது அது மட்டும் என் உறுதியான நம்பிகை....

    அன்பு பாராட்டுக்கள் நண்பனே....

    அன்புத்தோழி

    மஞ்சுபாஷிணி

    ReplyDelete