
பட்டுத்துகிலொன்றை படர்கொடிமேல் போர்த்தினதாய்
தட்டுத்தடுமாறிய முல்லை கொம்பின்மேல் படர்ந்தாற்போல்
விட்டுஇடம் மாறியது நம்இதயம் உடல்களோ
விட்டுப்போன இன்பங்கள் ஒவ்வொன்றாய்த்தேடின...
தவித்த என்இதழ்கள் ஏங்கின உனது
குவித்த இதழ்களில் தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும் கண்டுளரோ இவ்வின்பம்?
தவித்த என்னுயிருக்கு நீர் வார்த்தாய் இதழ்களால்...
காமனின் கண்பட்ட இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால் மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமபானத்தில் மயங்கிய தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம் நலமதனைச் சுகித்து நின்றோம்...