
கண்ணே கண்மணியே!
என் தாலாட்டுக்கு
கருப்பொருளாய் வாய்த்தவளே!
கண்ணே கருமணியே!
நீ கருவாய் இருக்கையில்
ஒரு வாய் உண்ணமுடியா
மசக்கை தந்தவளே!
உன்னைச் சுமந்ததால்
என் வயிறு
உன்னதம் பெற்றது...
நீ உண்ணும் போது
என் வயிறு குளிரும்
ரசாயனம் நிகழந்தது..
நாளை உலகுக்கு
அறிவுப்பசி தீர்ப்பவளே!
உன்பசி தீரட்டும் இன்று!
நிலாவைக் காட்டுகிறேன்
நீ அதில கால் வை நாளை!
கள்ளிப்பால் தரச்சொன்ன
கொள்ளிவாய்கள் அழுகட்டும்...
நீ அழப்பிறந்தவளல்ல!
ஆளப்பிறந்தவள் நீ!