Sunday, February 14, 2010

வலி...!
























உற்றவரென்று எண்ணியிருந்த சிலர்
எட்டி உதைக்கும் போது...

அடுத்திருந்து அழுதுதேற்றி
எட்டிப்போய் பரிகசிக்கும் போது...

நட்பென்று பேர் சொல்லி
நகம் நான் சதை நீ என்றே தினம்கூறி
நடுக்காட்டில் விட்டோடிய போது...

எதிரிக்காய் தீட்டுவதாய் கத்தியைக் காட்டி
எதிர்பாராமல் கழுத்தை நெருங்கும் போது ...

நீ இந்நாட்டின் பெர்ட்னாட்ஷா
உன் மூளை அருங்காட்சிக்கு அருகதை
என்றெல்லாம் கூறி
பின்னால் வாய் மூடி அழுத்தமாய்ச் சிரித்தபோது...

உன்னைப்போல் ஒருவன் இனி பிறக்க வேண்டும்
என்ன தேடினாலும் கிடைக்காத வைரம் நீ
என்றெல்லாம் உயர்த்திவிட்டு
நல்ல தொரு நகைச்சுவை இல்லையா எனும் போது...

இதயத்தில் நீ தான் இனி யாருமில்லை
உதயத்தில் வேறொருவன் என்று கூறும்போது...

பன்னீரால் உனக்கு முழுக்காட்டு எனச்சொல்லி
வென்னீரைத்தலையில் வாரிக்கொட்டும் போது...

அழகியென்றால் அது நீமட்டும் தான்
என நிதமும் ஏற்றிவைத்துப் பின்
பழகியபின் பார்க்கலாம் வருகிறேன் எனும் போது...

தாயெனத்தாங்குவேன் ஒருபோதும் கைவிடேன்
போயெனக்கு உன்னிதயம் அறுத்துவா எனும்போது...

ஊரே கைகொட்டிப் பாராட்டி பரிசளித்து
யாரே நீ என்று எக்காளமாய்ச் சிரிக்கும் போது...

பெருங்கவிஞன் நீதான் மற்றெல்லாம் வெறுங்கவிஞர்
அருமையான வித்தகன் உனைப்போலில்லை எனக்கூறி
உருப்படாத உனக்கு பெருமை ஒருகேடா
உன்னைவிட நல்லோர் இதோபார் போடா
என்றென்னை எல்லாரும் புறக்கணிக்கும் போது...

வலி...!

6 comments:

  1. உன்னைப் போல் ஒருவன் பிறக்க வேண்டும் . என்ன தேடினாலும் கிடைக்காத வைரம் நீ நண்பா. வாழ்த்துகள். ஆதிரா

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஆதிரா....!

    ReplyDelete
  3. அழகியவலி...

    நீ என்நண்பா
    நன்றிஉனக்கு

    ReplyDelete
  4. பெண்மை வாழ்க...
    மகளிர் தின வாழ்க...


    வாழ்த்துகள்.
    Roja sri

    ReplyDelete
  5. மிக்க் ந்ன்றி ரோஜா...!

    ReplyDelete
  6. அன்பு கலை

    வலியுடன் எழுதிய வரிகள் என்பதால் தான் படிக்கும்போதே வலிக்கிறதுப்பா...

    சோகங்களும் சோதனைகளும் எத்தனை நாளுக்கு தான் மனதில் வைச்சிருப்பே? எல்லாம் துடைச்சு போட்டுட்டு எழுந்து கம்பீரமா நடை போடுவதில் தான் இருக்கு எல்லாமே...

    உன் மனவலி நான் கண்டிப்பா அறிவேன். எல்லாம் சரியாகும் கண்டிப்பா கலை..

    காலை எழுந்தது முதல் இரவு படுக்க போகும்வரை எத்தனையோ நிகழ்வுகள் அதில் நமக்கு நன்மை தருபவை சிலவும் நமக்கு துன்பம் தருபவை பலவும் இருக்கும்.. வலி தரும் நிகழ்வுகளும் அடக்கம் தான் இதில்...

    ஆனால் அசந்து போய் உட்காரலாமா? சோர்ந்தால் அப்புறம் எப்படி அடுத்த நாள் நாம் தொடர்வது? நீ சோர்ந்து உட்காரும்போது தட்டி எழுப்ப இதோ உன் தோழி வந்தாச்சு... சியர் அப் கலை....

    நீ சோகத்துல எழுதினாலும் வலியின் வரிகள் மிக அருமை கலை... அதற்கு பொருத்தமான மிக அருமையான படமும் கலை....ஒவ்வொரு வரியுமே ஒவ்வொரு உறவையும் நட்பையும் காதலையும் நாட்டு நடப்பையும் மிக அருமையாக சொல்லி இருக்கே.. ஒன்னு விட்டுட்டே... பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அக்கடான்னு சாய பிள்ளைகளின் தோளை நாடும்போது அதை விட வேகமாய் முதியோர் இல்லம் தேடும் பிள்ளைகளை காணும்போது கண்கலங்குகிறது மன வலியால்....துடிக்கும் இதயம் என்று நிற்கும்னு தெரியாத இந்த நிலையில்லா மானிட வாழ்க்கையில் வலிக்கு மனிதன் அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நம்பிக்கை கூட வலியிடம் தோற்று போகும். அதுக்கு நாம விடலாமா? நோ விடவே கூடாது...

    வலியின்றி உதித்த மகவு உண்டோ?
    வலியின்றி சாதனைகள் தொடர்ந்ததுண்டோ?
    வலியின்றி வெற்றிகள் குவிந்ததுண்டோ?
    வலியின்றி வாழ்க்கை கண்டதுண்டோ?

    வலிக்காத உடல்பாகமும் உண்டோ?
    வலி கொடுக்காத காதலும் உண்டோ?
    வலியின்றி மனங்கள் மறந்ததுண்டோ?
    வலியில்லாத மனிதனும் உண்டோ?

    வலிமையில்லா நட்பே வலிகொடுக்கும்
    வலிமையுள்ள அன்பே விட்டுக்கொடுக்கும்
    வன்மையில்லா நாக்கே சுட்டெரிக்கும்
    வஞ்சனையில்லா காதலே உயிர்க்கொடுக்கும்

    வன்மமில்லா மனிதருள் மனிதம் இருக்கும்
    வம்புகளில்லா குடும்பம் நன்றாய் உயர்ந்திருக்கும்
    வரையறையில்லா நேசம் மிக தொடர்ந்திருக்கும்
    வலிகளே வெற்றிக்கு என்றும் வழிவகுக்கும்.....

    அன்புத்தோழி

    மஞ்சுபாஷிணி

    ReplyDelete