Sunday, July 24, 2011

இத்தனை இன்னல்கள் ஏன் படைத்தாய்..?





இத்தனை இன்னல்கள் ஏன் படைத்தாய்..? 


படம்


ஒரு வேளைச்சோற்றுக்கு 
ஓராயிரம் பிழிபாடுகள்...

ஒட்டிய வயிற்றினை 
சிறிது விரித்திட
முந்தானை விரித்துப் போராட்டங்கள்..

மணியரிசி கண்ணில் காண
பிணிகள் பல காணும் அவலம்...

ஓசையின்றி குழந்தை உறங்கிட
வேசை போலவே ஓலங்கள் பலப்பல..

ஆசை ஆசையாய் ஈன்ற மகவுக்கு 
ஆடை அணிவிக்க மார் நழுவிய போராட்டங்கள்..

நோயுற்ற கணவன் நோவு தீரவே
பாவிகளிடம் கற்பு மீட்புச் சமர்கள்...

எத்தனை கோடி இன்னல்கள் வைத்தாய்
எங்கள் இறைவா..!
எம்மை ஏனோ இங்கே படைத்தாய்..?

2 comments:

  1. உலகில் இன்னும் இதை விட இன்னல்கள் தான் இருந்துவிடுமோ என்று எண்ணும் அளவுக்கு உயிர்களின் வேத்னைகளை மிக அருமையான வரிகளில் எளிமையான நடையில் தந்தது சிறப்பு கலை....

    ஒரு வேளை சோற்றுக்கு தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்.....

    பிச்சை எடுத்தும் ரயிலில் கால் ஊனத்துடன் சுத்தம் செய்ய வந்து தான் போட்டிருக்கும் கிழிந்த சட்டையையே கழற்றி நாம் கால் வைக்குமிடமெல்லாம் சுத்தம் செய்து நம்மிடம் பரிதாபமாக கையேந்தும் சிறுவர்களின் முகமும் இடுப்பில் பசியில் பஞ்சடைந்த கண்களுடன் காய்ந்த வயிற்றுடன் குழந்தை அழக்கூட திராணியற்று இருக்க அம்மா என்று தலை சொறிந்து பிச்சை கேட்கும் பெண்களின் முகமும் அவஸ்தையாய் என் முன் தெரிகிறது இந்த வரி படிக்கும்போது....

    உடலில் ஓடும் குருதியை விற்று வீட்டில் உலையரிசி கொதிக்கவைக்கும் அவலநிலையை சொல்கிறது இந்த வரிகள்...

    பிளாட்பாரத்தில் மேலே ஒரு தடுப்பு கூட இல்லாமல் விடாமல் செல்லும் வண்டிகளின் ஓசையுடன் குழந்தைக்கு தாலாட்டி பாடித்தான் தூங்கவைக்க முடியுமா? இந்த ஓசையே குழந்தைக்கு தாலாட்டவைத்தது தான் விதியின் சதியா?

    அன்புக்கும் காதலுக்கும் கவிதையாய் பிறக்கும் குழந்தைக்கு உடை வாங்கக்கூட எத்தனை எத்தனை போராட்டங்கள்...

    நோயாளிக்கணவன் வேலைக்கு போகமுடியாத சூழலில் தகிக்கும் வெயிலில் காமத்துடன் மேயும் கழுகுக்கண்களாலேயே கற்பழிக்கும் பாவிகளிடமிருந்து கற்பை தினம் தினம் காத்து...

    அப்பப்பா பெண்ணாய் படைத்தாயே இறைவாய் அதிலும் ஏழையாய் பிழைக்க வழியும் காட்டாமல் விட்டாயே இறைவா....

    இன்னல்கள் அடுக்கடுக்காய் தொடர்ச்சியாக தந்து எத்தனைமுறை தான் நெருப்பில் இருந்து மீள்வது?

    இறைவனிடம் முறையிட்ட வரிகளாய் மிக அருமையான ஒரு கவிதை தந்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள் கலை.

    ReplyDelete
  2. உன் வாழ்த்தும் ஆசியும் என்னை அகமகிழ்வித்தன மஞ்சு..!

    ReplyDelete